தன்வந்திரி பெருமாளை போற்றி நன்மை அடைய வழி சொல்லும் கவசங்களின் தொகுப்பு நுால்.
ஆஞ்சநேயர் துதியுடன் துவங்குகிறது. தன்வந்திரி என்ற பெயருக்கு விளக்கம் தரப்பட்டு உள்ளது. உடலை தைக்கும் அறுவை சிகிச்சையாளன் என விளக்குகிறது. சூரிய பகவானிடம் ஆயுர்வேத மருத்துவம் கற்றவர் தன்வந்திரி என குறிப்பிடுகிறது.
தன்வந்திரி குறித்த புராண நுால்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சடாரி குறித்த அறிமுகம் உள்ளது. கருடாழ்வார் பெருமை தனிப்பாடலாக தரப்பட்டுள்ளது. தன்வந்திரி பெருமாள் கவசம் முழுமையும் கவிதை வடிவில் உள்ளது. உரிய படங்களுடன் அமைந்த கவச நுால்.
– ராம்