வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
மதுரையை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, துலுக்க நாச்சியாரை சந்திப்பதை வர்ணிக்கிறது. சைவ – வைணவத்தை இணைக்கும் ஆன்மிகப் பார்வையுடன் உள்ளது. நடைமுறை உண்மை, தியாக மனப்பான்மை, கூட்டு குடும்ப நெறிமுறைகளுடன் உள்ளது.
வளரி என்ற ஆயுதத்தை, வளர் இளம் பெண் பயன்படுத்தும் வித்தையை புதுமை நோக்கில் சொல்கிறது. பெருமாள் பாதத்தில் பணிந்து சேவை செய்த சமூகத்தின் பக்திப் பெருக்கை வெளிப்படுத்துகிறது.
கதை நடந்த காலக்கட்டத்தை கண்முன் கொண்டு வருகிறது. குழந்தையின் உயிர் காக்க குதிரையில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்வதாக அமையும் காட்சியும், பாத்திரப் படைப்புகளும் அருமையாக உள்ள நாவல் நுால்.
– சீத்தலைச் சாத்தன்