வாரமலர் இதழ் நடத்திய டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம் எழுத்தாளர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளது.
புத்தகத்துக்கு, ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் கி.ராமசுப்பு எழுதியுள்ள அணிந்துரையில், சிறுகதை போட்டி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களை உருவாக்கி வருவதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டி உள்ளார். போட்டியில் வென்றோரின் படைப்புகள் பல்வேறு இதழ்களிலும் வெளிவருவதை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இந்த தொகுப்பில் 21 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. அவை, ‘எழுத்து என்பது ஒரு விளக்கு; அதை ஏற்றுவோருக்கு மட்டும் அல்ல, சுற்றியுள்ளோருக்கும் வெளிச்சம் தரும்’ என்ற தத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
மாமியாரின் சங்கீதம், மரபு வழி குடும்ப உறவு களுடன் அமைந்த நுண்ணுணர்ச்சியை சில கதைகள் வெளிப்படுத்துகின்றன.
அமைதியின் குரலாக கல்வி விளங்குவதை சுட்டிக் காட்டு கின்றன. ஆசிரியர் கடைப்பிடிக்கும் நேர்மை, சமூகப் பொறுப்புணர்வை மையமாக உடைய கதைகளும் உள்ளன. குடும்ப பாசம், தந்தை,- மகள் உறவில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மனசாட்சி வழி நின்று மனித உறவுகளை ஆராய்கின்றன.
தொகுப்பில் எல்லா கதைகளும் உணர்வுபூர்வமானவை. பெண் கல்வி, மனிதநேயம், ஒழுக்கம், தாய்மை, நம்பிக்கை போன்ற உயர்ந்த பண்புகளை மையப் பொருளாக கொண்டவை.
எளிய உரையாடல்களுடன், இலக்கிய நயமும் கலந்துள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் படிக்க வேண்டிய அபூர்வ சிறுகதை தொகுப்பு நுால்.
-– இளங்கோவன்