சித்தர், முனிவர், ரிஷி, தேவர் பற்றி அகத்தியர் ஞான காவியம் வழங்கிய செய்திகளை கூறும் நுால்.
மீண்டும் பிறவாமையே மரணமில்லா பெருவாழ்வு என்ற கருத்து விளக்கப்பட்டுள்ளது. அஷ்டசித்தியின் பரிமாணம், வியாச ரிஷியின் மேன்மை, சமாதியை தேர்வு செய்யும் முறை பற்றி சித்தர் பாடல் கருத்துகள் உள்ளன.
ஜாதகத்தில் ஒவ்வொரு ராசி கட்டத்திலும் நவக்கிரக நாயகர்களின் உச்சம், நீச்சம், ஆட்சி, நட்பு, பகை எப்படி இருக்கும் என்பதை கூறுகிறது.
பாவங்களின் பலன், ஜனன பலன், புலிப்பாணி சித்தர் பாடல் வழியாக விவரிக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் ஞான மார்க்கத்தை எளிமையாக விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்