ராமாயணம், மகாபாரதம் காவியங்களில் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்களின் மறுபக்கத்தை கூறும் நுால்.
தர்ம வழியில் செல்ல வழி சொன்ன விபீஷணனின் அறிவுரையை கேட்காமல் ராவணன் மாண்டது கூறப்பட்டுள்ளது. ராவணன் மனைவி மண்டோதரி மறைத்த மந்திர அஸ்திரத்தை, அனுமன் கைப்பற்றியது கூறப்பட்டுள்ளது. ராமனுக்காக சரயு நதியில் உயிர் நீத்த லஷ்மணன் பெருமையை கூறுகிறது.
மகாபாரதத்தில் கடோத்கஜன், பாண்டவர் வெற்றி பெற செய்த உயிர்த்தியாகத்தை விவரிக்கிறது. அசுவத்தாமன், பாண்டவ வம்சத்தை அழிக்க எண்ணி செயல் பட்டதற்கு, கிருஷ்ணர் கொடுத்த சாபம் விளக்கப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய ஆன்மிக நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து