வட்டார வாழ்க்கை சார்ந்து தனித்துவமான மொழியில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
புத்தகத்தில் எட்டு சிறுகதைகள் இருக்கின்றன. ஓடாவி என்றால் கட்டுமரம் செய்யும் தச்சன் என பொருள். ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களின் கருவூலமாக உள்ளது. வாழ்க்கை பெருமிதங்களை மெச்சாமல், வினா தொடுத்து யோசிக்க வைக்கின்றன.
தமிழகத்தில் சுனாமி பாதிப்புக்கு பின் மீன் பிடிக்க, ‘அல்பீஸ்’ என்ற கட்டுமரங்கள் வழக்கொழிந்து, பைபர் படகு புழக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களை முன் வைக்கிறது. அது சார்ந்த செயல்பாடுகளையும் படம் பிடிக்கிறது. புத்தகத்தின் அமைப்பும், வடிவமைப்பும் இடம் பெற்றுள்ள ஓவியங்களும் கச்சிதமாக அமைந்துள்ளன. ரசனை மிக்க விவரிப்புகளுடன் படைக்கப்பட்டுள்ள சுவாரசியமான கதைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு