சோழர் கால சமய நிலையை சிறப்பாக கூறும் நுால்.
சோழர் கால தெய்வ திருப்பணிகள், ஆபரணங்கள், பொன் வேய்தல், சைவ மற்றும் வைணவ கோவில்கள் அமைந்துள்ள இடங்களை சொல்கிறது. கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சோழர்கள் பற்றி விபரங்களை தருகிறது. புலவர்கள், பாடியுள்ளதையும் காட்டுகிறது.
திருவண்ணாமலை கோவிலுக்கு பொன்வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என்ற கல்வெட்டு செய்தியை விவாதிக்கிறது. கோவில்கள் கட்டியதும், நிலம், ஆடு, மாடு, அணிகலன் வாரி வழங்கியதை கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் பகிர்கிறது. சோழர் சிவ பக்தியையும், கோவில் திருப்பணிகளையும் தொகுத்து கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்