உலகின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தென் கொரிய நகரத்தின் இருண்ட தெருக்களில் அலையும் ஒரு இளம் பெண் பற்றிய கதை, ‘சைனா டவுன்’ என்ற தலைப்பில் உள்ளது. உளவியல் பாதிப்பின் தீவிரம் இதில் வெளிப்பட்டுள்ளது. எழுத்தால் உலக அளவில் பிரபலமடைந்த லியோ டால்ஸ்டாயின் இரண்டு கதைகள் உள்ளன.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பிரான்ஸ் எழுத்தாளர்களின் கதைகள் இடம் பெற்றுள்ளன. மனதில் நெகிழ்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை கொண் டு உள்ளன. வாழ்வதற்கு அடிப்படையான கேள்விகளை எழுப்பி சிந்திக்க வைக்கின்றன. சிந்தனையின் பரிணாமத்தை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– மதி