அருட்பிரகாச வள்ளல் பெருமானின் வரலாற்றை சுருக்கமாக பதிவு செய்துள்ள நுால்.
சிதம்பரம் அருகே மருதுாரில் அவதரித்தார் ராமலிங்க அடிகளார். அவர், ‘ஓதாதுணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்சோதி’ என பாடி முருகப்பெருமானை எண்ணி தியானத்தில் அமர்ந்து ஞானம் பெற்றதாக கூறுகிறது. ஞானசம்பந்தரை, குருவாக போற்றியதை குறிப்பிடுகிறது. கந்தக்கோட்ட முருகனிடம் வேண்டிய வரங்கேட்டதே, ‘தெய்வ மணிமாலை’ என சுட்டுகிறது.
தர்மசாலை நிறுவி பசிப்பிணி போக்க அணையா அடுப்பை மூட்டியது, சத்திய ஞானசபை நிறுவியது, திருவடி அடைந்த நிகழ்வு பற்றி குறிப்பிடுகிறது. திருவருட்பா பாடல்களும் இடம்பெற்றுள்ளன. வள்ளலாரின் அடியவருக்கு உவப்பாக அமைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்