அறிவுக்கூர்மையும், சமயோசிதமும் மிக்க கதைகளின் தொகுப்பு நுால்.
புத்தகத்தில், 18 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புத்தி உள்ளவனுக்கு சித்தியாகாதது எதுவுமே இல்லை என்பதை அருமையாக விளக்குகிறது. கதை நாயகன் அப்பாஜியின் பெருமைகளை கேள்விப்பட்டு, சோதிக்கவும், வென்று சாதிக்கவும் டில்லி பாதுஷா முயற்சிகளை சாதுரியமாகக் கையாண்டு ஜெயக்கொடி நாட்டியதை விளக்குகின்றன.
அப்பாஜிக்கு போட்டியாக மகாராணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மந்திரி எப்படியெல்லாம் தடுமாறுகிறார் என்பதை எடுத்துக்காட்டும் கதைகளும் உள்ளன. அப்பாஜியின் புத்தி கூர்மையை பிரகடனப்படுத்த, ‘உதைத்த காலுக்குச் சலங்கை’ என்ற சிறுகதையே போதுமானது. சிறுவர்கள் விரும்பும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்