விலங்குகளை கதாபாத்திரங்களாக அமைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நீதி போதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பூனைகளுக்கு பயிற்சி கொடுத்தால் நாயைப் போல அவை செயலாற்றும்; பாம்புகளைக்கூட கொன்றுவிடும் என முதல் கதையில் மையக்கருத்து அமைந்துள்ளது. பகிர்ந்து உண்பதும், யாருக்கும் கொடுப்பதும் தான் உண்மையான வாழ்க்கை என்பதை பாடமாக சொல்லி கொடுக்கிறது.
ஊர் மக்கள், காட்டுப் பூனையை ஏமாற்றுவதும், மனம் மாறுவதும் நெகிழ்ச்சி தருகிறது. பூனையால் சகுனம் சரியில்லை என்பதை விட, பூனைக்கு சகுனம் சரியில்லை என்ற உண்மை வேடிக்கையாக புகட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறிவூட்டி, படிப்பை விருத்தி செய்யும் வகையிலான புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்