வரலாற்றில் தாய்வழி சமூகம் குறித்து பேசும் நாவல் நுால்.
சிந்து சமவெளிக்கு முந்தைய காலகட்டத்தில் கடலால் விழுங்கப்பட்டதாக பண்டைய தமிழர் நாகரிகத்தை சித்தரிக்கிறது. தாய்வழி சமூக நெறிகளை, தமிழ் சமூகம் மீதான புனைவாக விரிகிறது. தாய் வழி சமூகம் வளர்ச்சி பெற்றிருந்ததை புனைவு வழியாக படம் பிடிக்கிறது.
சங்க இலக்கியத்தில் நற்றிணையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன டிராகன்கள் போல், நாய் இனமான அலங்கு குறித்தும், யாளிகள் குறித்த விபரமும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பழந்தமிழர் வரலாறு சார்ந்த புனைவு நுால்.
– ஊஞ்சல் பிரபு