சமகால பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன.
குரு பீடம், வெஞ்சினம், சீனன் சாமி, குளிர், ஆகுதி, புனை சுருட்டு, மீச்சிறு இருள், மித்ரா, ராசன், பலி, கை, கப்பை, மெழுகு என வித்தியாசமான தலைப்புகள். பல, யுவ புரஸ்கார் விருது பெற்றவை. பிரபல எழுத்தாளர்களின் தாக்கம் இன்றி உருவாக்கப்பட்டுள்ளன.
கதை சொல்லாடல், மொழி அழகியல், உணர்ச்சிகரமான நடை போன்றவை ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான திறனை காட்டுகின்றன. கதைகளில் புனையப்பட்டுள்ள பாத்திரங்கள் புது மனிதனாக உணர வைக்கும் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்