உணர்ச்சி பெருக்கான நடையில் இலங்கை தமிழில் எழுதப்பட்டுள்ள நாடக நுால். திகிலும், திருப்பங்களும் நிறைந்துள்ளது.
அன்னை மீது அளவற்ற பாசம் கொண்ட வீரம் நிறைந்த மகன் காங்கேயன். அன்பு மட்டுமே நிறைந்து, வேறு ஏதும் தெரியாத கிராம பெண்ணாக அவன் தாய். காங்கேயன் உள்ளம் அறிந்த நண்பனாக முத்துக்காளை போன்ற அருமையான பாத்திரங்களுடன் நகர்கிறது.
ஏழ்மையில் தவிக்கிற அன்னையை, பூரிப்போடும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய எண்ணம் கொள்கிறான். பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்று சங்கடங்களை எதிர்கொள்கிறான். அவன் சாகசங்களுடன் சாதுரியமாக செயல்பட்டதை விவரிக்கிறது. இப்படி காங்கேயன் பற்றி காட்சிகள் உள்ளன. வாசிப்போர் மனதில் பரபரப்பை ஏற்படுத்தும் நாடக நுால்.
– டாக்டர் கார்முகிலோன்