வாழ்வில் சந்தித்த சம்பவங்களை முன்வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் நடமாடுவது போல் உள்ளன.
சொந்தத்தில் திருமணத்தை தவிர்க்க நடக்கும் முயற்சி யாக ஒரு கதை உள்ளது. உறவில் பெண்ணெடுத் தால் ஊனமாக பிள்ளை பிறக்கும் என்ற கருத்தை மையப்படுத்தியுள்ளது. அம்மா ஆசையை நிறைவேற்ற மனைவியுடன் நாடகமாடுகிறான் மகன். இது மாதிரி நடக்குமா என்பது கேள்வியாகிறது. நடந்து இருப்பதால் தான் கதையே உருவாகியுள்ளது.
பொருள் மீது அக்கறையும், கவனமும் அவசியம் என்ற போதனையின் உண்மையை சொல்கிறது ஒரு கதை. பிள்ளைகளுக்கு கலைகள் மீது சுயமாக ஆர்வம் வர வேண்டும்; பெற்றோர் திணிக்கக் கூடாது போன்ற கருத்துள்ள கதைகளின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச்சாத்தன்