இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும் நுால்.
கர்நாடக இசையை கற்று, சிறந்த பாடகியாக விரும்புகிறார் ஒரு இளம்பெண். அவரது வாழ்க்கையில் நடக்கும் போராட்டம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மணம் புரிய மறுத்ததன் காரணமாக, கொடூரன் ஒருவனால் அந்த பெண்ணின் முக அழகு சிதைக்கப்படுகிறது. இந்த நிலையிலும் முயற்சியை கைவிடாத அவளது தன்னம்பிக்கையை எடுத்துரைக்கிறது.
மகள் ஜெயிக்க ஏழ்மை, ஊனத்தையும் பொருட்படுத்தாமல் உறுதுணையாக இருந்த அவளது தந்தையின் துணிச்சலையும் உரைக்கிறது. பல்வேறு சோதனைகளில் புற அழகைப் பார்க்காமல், அகத்தை மட்டும் பார்த்த நண்பன் அரவிந்த் குணத்தை மெச்சுகிறது. அந்த பெண்ணின் கனவு கைகூடியதா என்பதை சுவாரசியம் குன்றாமல் கூறும் நாவல்.
– சிவா