ராணி சம்யுக்தை பற்றிய அருமையான நாடக நுால்.
ராஜபுத்திர குலத்தில் பிறந்த ஜெயச்சந்திரனுக்கு, அதே இனத்தை சேர்ந்த வீரன் பிரித்விராஜன் மீது மாறாத துவேசம். அது பொறாமையாக வளர்கிறது. அவனை வீழ்த்தி சக்கரவர்த்தியாக முடி சூட ஆசைப்படுகிறான். மன்னர்களுக்கு எல்லாம் ஓலை அனுப்புகிறான். பிரித்விக்கும் ஓலை போகிறது.
ஓலையை படித்து எள்ளி நகையாடி, விழாவை தவிர்க்கிறான் பிரித்வி. அரங்கத்தில் குறைபாடு நியதிப்படி, சக்கரவர்த்தி என்ற அங்கீகார விழா ரத்தாகிறது. பொறாமையும், கோபமும் அதிகரிக்கிறது. அது எப்படி எல்லாம் வடிவம் எடுக்கிறது என்பதே கதையின் மையக்கரு. ஒரு வரலாற்று நிகழ்வை உணர்ச்சிமிகு வார்த்தையால் விவரிக்கிறது. ரசித்துப் படிக்க துாண்டும் அருமையான நாடக நுால்.
– டாக்டர் கார்முகிலோன்