ஜனரஞ்சக சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
இன்றைய பிரச்னை, வழி தவறும் இளைஞர்கள் மனநிலை, உறவு சிக்கல், அதிகார துஷ்பிரயோகம் என பல கருத்துகளை பதிவு செய்திருக்கிறது. சமூகம், உறவு சிக்கல் வலையில் சிக்கி தவிப்பதை மையப்படுத்தியுள்ளன.
ஒருவனை வலிமைப்படுத்துவதும், எளிமையாக்குவதும் காலமும் கர்மாவுமே செய்யும் என்பதாக உணர்த்துகிறது. இந்த அறிவை பெறும்போது மனிதன், காலத்தை கடந்து வெகுதுாரம் சென்றிருப்பான் என கோடிட்டு காட்டுகிறது. காலம் பதில் சொல்லும் என்ற கருத்தியலுடன் அமைந்துள்ள நுால்.
– ஊஞ்சல் பிரபு