மகாபாரதத்தின் சாராம்சத்தை படக் கதையாக தந்து குதுாகலிக்க வைக்கும் நுால்.
அஸ்தினாபுரம் குரு தேசத்தலைநகரில் சந்தனு சத்யவதியில் துவங்கி, மகாபாரதப் போர் முடிந்து, கவுரவர்கள் அழிந்த பின், தர்மபுத்திரர் பட்டாபிஷேகம் வரை சங்கிலித் தொடராக தொய்வு இன்றி உள்ளது. கதைக்கு படங்கள் பெரிதாகவும், அழகாகவும் உள்ளன. வசனங்கள் எளிதாக, சுருக்கமாக எதிரில் நின்று பேசுவது போல் உள்ளன.
பிறப்பால் யாரும் சிறப்பு பெறுவதில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது. கர்ணனை அரசனாக்கிய துரியோதனன் நட்பு முகம் முழுப் பக்க ஓவியமாக உள்ளது. அரக்கு மாளிகையும், அது எரியும் காட்சியும் அருமையாக வரையப்பட்டுள்ளன. எல்லா வயதினரையும் கவரும் படக் கதை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்