திருமூலரின் ஆன்மிகப் பயணங்களை தொகுத்து தரும் நுால். திரேதாயுகத்தில் பயணித்து, கலியுகத்தில் கயிலைக்கு சென்றதாக கூறுகிறது.
முதல் பயணமாக, கயிலையில் இருந்து தில்லை சென்று சிவன் நடனக் காட்சியை கண்ட பரவசத்தை விவரிக்கிறது. ஆனந்த தாண்டவத்தின் விளைவுகளை விளக்குகிறது. கும்பகோணம் அருகே திருவாவடு துறையில் தொழுது, பொதிகைக்கு பயணித்ததாக கூறுகிறது.
மேரு மலைக்கு வரும் சித்தர்களுக்கு திருமூலர் உபதேசம் செய்ததாக குறிப்பிடுகிறது. திருமந்திரம் உருவான வரலாற்றை எடுத்துரைக்கிறது. பிரபஞ்சத்தில் உணர்வதை பாடல்கள் மேற்கோளுடன் முன்வைக்கிறது. ஊகங்களின் அடிப்படையில் புனைந்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு