பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
நேரில் கண்ட மற்றும் விசாரித்த தகவல்கள் அடிப்படையில் கதை புனையப்பட்டுள்ளது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. புராண பாத்திரங்கள், நவீன உலகில் உருப்பெற்றால் எப்படி இருக்கும் என புதுமை சித்திரமாக காட்டப்பட்டுள்ளது.
தாய் தெய்வம், தொல்குடி படிமங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது புதுமையுடன் இருக்கிறது. பெண்மையின் வலிமையை பேசுகிறது. பலியிடுவதை தியாகத்துடனும், கொலையை பழியுடனும் இணைத்து விவரிக்கிறது. பெண் நோக்கில் பலியிடல் சடங்குக்கான அங்கீகாரத்தை தேடுவதாக நிறைவு பெறுகிறது.
பழங்கால புராணத்தையும், நவீன வாழ்வையும் இணைத்து உருவாக்கியிருக்கும் புனைவாக மலர்ந்துள்ள நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு