விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையின் தத்துவம், அர்த்தம் அடங்கி வழிகாட்டியாக அமைந்திருப்பதை விளக்கும் நுால்.
அம்புப் படுக்கையில் அந்திம காலத்தை எதிர்நோக்கிய பீஷ்மர், யுதிஷ்டிரரின் ஆறு கேள்விகளுக்கு பொருட் செறிவுடன் அளித்த பதில்கள் உள்ளன. விஷ்ணு சகஸ்ரநாமத்தின் மூலமான, 108 சுலோகங்களும் தமிழ் எழுத்துக்களில் அமைந்துள்ளன.
அதற்குரிய பொருளும் விளக்கமும் எளிய தமிழ் நடையில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. நிறைவாக பல ஸ்ருதியின், 33 சுலோகங்கள் இடம்பெற்றுள்ளன. விஷ்ணுவை யாராலும் அனுமானிக்க முடியாது; அனுபவிக்கத்தான் முடியும் என்கிறது. அப்படி அனுபவிக்க பெரிதும் உதவும் உரை நுால்.
– புலவர் சு.மதியழகன்