சிறுவர்களால் உருவாக்கப்பட்ட அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குழந்தைகளுக்கு நேரடியாக சொல்லும் பாணியில் அமைந்துள்ளது.
புத்தகத்தில் இரண்டு பேரின் கற்பனைகள் மிளிர்ந்து உள்ளன. தருண், கவின் என்ற சிறுவர்களின் கற்பனை உலகம் புனைவுகளாக வடிக்கப்பட்டுள்ளன. மகன்கள் சொல்வதை கேட்டு எழுத்தில் வடித்துள்ளார் தாய். பெரும்பாலும் இயற்கை சார்ந்த கற்பனை நயத்துடன் கதைக்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதையும் பொருத்தமான படங்களுடன் இடம் பெற்றுள்ளன. சிறுவர், சிறுமியர் வாசிக்கவும், துாங்கப் போகும் முன் குழந்தைகளுக்கு சொல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளன. கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக அமைந்த கதாபாத்திரங்கள் சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கும்.
– மதி