வரலாற்று கதைமாந்தர்களால் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
இமயவர்மர், அகிலன், குழலி, நாகேந்திரன், உடும்பன் என கதாபாத்திரங்களை சுற்றி காட்சிகள் அமைந்துள்ளன. எதிரிகளின் சூழ்ச்சி, சதி, அரசியல் தந்திரம், உட்பகை, துரோகம் என அமைந்துள்ளது. எளிய உரையாடல் களோடு நகர்கிறது.
பனைத்தீவில் கப்பல் விபத்து, தோடர் வாழ்க்கை, கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை கதை என பின்னப்பட்டு உள்ளது. தீவில் அந்நிய இளைஞனோடு காதல் வயப்படும் பெண்ணின் பிரச்னையும் சுவை குறையாமல் விவரிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பு தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு