தேவதை பற்றிய நம்பிக்கை அயல்நாடுகளில் எப்படி உள்ளது என எடுத்துரைக்கும் நுால்.
தேவதை பற்றிய நம்பிக்கை, காடு, மாய இசை மற்றும் ஓவியங்களில் உள்ளதை கூறுகிறது. பூதம், குட்டிச் சாத்தான், ஆடையில்லாத பெண் ஓவியம் பற்றியும் எடுத்துரைக்கிறது. இங்கிலாந்தின் வடபகுதி மக்களிடம் தேவதை பற்றிய நம்பிக்கையை விவரிக்கிறது. தேவதை பற்றிய கருத்தை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம், விசித்திரமான மனப்போக்கு பற்றி கூறுகிறது.
நெருப்பில் விழுந்த தேவதை, ரோஜா வாசனையை அதிகம் விரும்பும் ஆவி போன்ற நம்பிக்கைகளை குறிப்பிடுகிறது. இறந்த ஆன்மாக்கள், அந்துப் பூச்சிகள், பட்டாம் பூச்சிகள் பற்றி வித்தியாசமான கதைகள் உள்ளன. அயல்நாடுகளில் தேவதை பற்றி நிலவும் நம்பிக்கைகளை அறிய தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்