நயமான 43 சிறுகதைகள் உள்ளடக்கிய நுால்.
தலைப்பு ஒருவித எண்ணத்தை தோற்று வித்தாலும், படித்து முடித்தவுடன், ‘அடடா’ என சொல்ல வைக்கிறது. கனம் மிக்க கருத்தை ‘நண்பரின் ஆன்மா’ சிறுகதை சொல்கிறது. பாட்டியின் உரையில் உண்மை இருக்கு என, ‘மின்சாரப் பெட்டி’ சிறுகதை எண்ண வைக்கிறது. கர்வம் பிடித்த மனைவிக்கு சரியான பாடமாக, ‘அம்மா பெயர் சொல்லாதே’ சிறுகதை அமைந்துள்ளது.
பணத்திற்காக எதையும் செய்ய துணியும் மனிதர்கள் மேல் வீசும் சாட்டையடியாக, ‘சேவல் முட்டை’ சிறுகதை உள்ளது. உலகம் போகும் போக்கை உள்ளது உள்ளபடி உரைக்கிறது. இப்படி யோசித்தால் தான் என்ன என்று கேட்க வைக்கிறது, ‘ரேஷன் கடை இலவசம்’ கதை. நேரலையில் அந்தமான் தீவு உணர்வை ஏற்படுத்தும் ‘அந்தமான் 2025’ சிறுகதை அபாரம்.
– டாக்டர் கார்முகிலோன்