நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பற்றிய நாவல்.
ஆங்கிலேயரை எதிர்த்து போராட, சாதாரண மக்களுக்கு பயிற்சி தந்து அமைப்பை உருவாக்கியதை விவரிக்கிறது. அதில் சேவை செய்த வீரர் குடும்பங்களை தேடி கண்டறிந்து நெடுங்கதை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காலில் செருப்பின்றி நடந்தும், வாகனமின்றி அலைந்தும், உணவின்றி வாடியும் செயல்பட்டது, தேசப்பற்றின் புதிய பரிமாணத்தை தெரிவிப்பதாக உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி உருவாக்கிய படை வீரத்தை, இந்த தலைமுறைக்கு கதை போல் தரும் அருமை நுால்.