கத்தோலிக்க கிறிஸ்துவ கதாபாத்திரங்களை மையப்படுத்திய நாவல் நுால்.
உயர் கல்வி கற்ற இளைஞர்கள் குருத்துவ கல்லுாரியில் சேர்கின்றனர். அதில் கடினமான பயிற்சி, படிப்பை முடித்து குரு ஸ்தானத்திற்கு வருவது எத்தகைய கடினமானது என எடுத்துக்காட்டுகிறது.
முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன் நண்பரின் தங்கையை சந்திக்கிறான். அன்பும், அறிவும், அழகும், ஆற்றலும் உள்ள அவளை மணம் புரிகிறான். இதனால், குருத்துவ படிப்பை தொடர முடியாமல் வெளியேறுகிறான். மெத்தப் படித்திருந்தாலும், சித்தத்தில் தெளிவில்லாவிட்டால் அறிவை இழக்க வேண்டி வரும் என்ற கருத்தை முன் வைக்கிறது. நெஞ்சில் உறுதி இல்லாவிட்டால், வஞ்சிக்கப்படுவது உறுதி என்கிறது. திருப்பங்கள் நிறைந்துள்ள நுால்.
-– டாக்டர் கார்முகிலோன்