தனி மனிதன் சினிமா துறைக்கு வந்த கதையையும், வாழ்வின் பாதையையும் விவரிக்கும் நுால்.
சிறுவயது நினைவு, கனவுகளை தேடல் வழியாக விவரிக்கிறது. நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு போன்றவை மந்திரம் போல் கொண்டிருந்ததை அறிய வைக்கிறது. சிறுவயதில் துளிர் விடும் சினிமா கனவு, அதற்கு பத்திரிகைகளின் பங்கு, முதல் நடிப்பு அனுபவம் என சுவாரசிய தகவல்களை தருகிறது.
வாழ்வு பயணத்தை கதை போக்கில் சொல்லியிருப்பது, உடன் பயணிக்கும் சுகத்தை தருகிறது. சீரான நடை தனித்துவமாக இருக்கிறது. ஒரு செயலை உண்மையாய், முழு விருப்பத்தோடு நிறைவேற்ற முயன்றால் அள்ளிக் கொடுக்கும் என்கிறது. அனுபவங்களை அள்ளித் தருகிறது. சினிமா என்ற வானம் வசப்பட்டது எப்படி என்பதை தெளிவாக விளக்கும் நுால்.
– ஊஞ்சல் பிரபு