முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரையுலக சாதனையை சுருக்கமாக எடுத்து சொல்லும் நுால். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருபெரும் நடிகர்களின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி புகழுக்கு வித்தாக இருந்ததை தெரிவிக்கிறது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தியில் நடித்ததற்கு வழங்கப்பட்ட சம்பளம், வசனம் எழுதிய கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. நடிகரை விட வசனம் எழுதியவர் உயர்ந்த சம்பளம் வாங்கியதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தீண்டாமை, விதவை மறுமணம், சுயமரியாதை திருமணம், மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்ற மறுமலர்ச்சி சிந்தனைகளை திரைப்படம் வாயிலாக வழங்கியதை நிலைநாட்டுகிறது. கருணாநிதியின் திரைப்பயண வெற்றியைக் கூறும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்