பத்திரிகை பணியில் கிடைத்த அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் உரைக்கும் நுால். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த விபரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பத்திரிகைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றியவரின் சுயசரிதையாக மலர்ந்துள்ளது. நிருபர், உதவி ஆசிரியர், ஆசிரியர் என பத்திரிகைகளில் பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளையும், சந்தித்த நெருக்கடிகளையும் விவரிக்கிறது. நடைமுறை விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்திரிகை பணியை உதறி சுயதொழில் துவங்கி, ஏற்ற இறங்கங்களை சமாளித்து முன்னேறியதை எடுத்துரைக்கிறது. வெளிநாடுகளில் நண்பர்களுடனான சுற்றுலா அனுபவங்களையும் பகிர்கிறது. நம்பிக்கை ஏற்படுத்தும் வாழ்க்கை அனுபவ நுால்.
– ஒளி