தொழில் அதிபர் நல்லி குப்புசாமி எழுத்துகளில் தொகுத்த மணிமாலை. ஒவ்வொரு பக்கமும் சிந்தனை வீரியத்தால், வாழ்வில் ஜெயித்த விதத்தை புரிய வைக்கிறது.
நல்ல இதயம் கொண்டிருப்பதை அறிஞர்களின் சிந்தனை வழி தரப்பட்டுள்ளது. நிர்வாகம் என்பது நிகழ்காலத்தில் செயல்பட்டாலும் எதிர்காலத்தை தீர்மானிப்பதை எடுத்துரைக்கிறது. இருப்பதில் நிம்மதி தேடு-, இல்லாததற்கு ஏங்காதே- போன்ற பொன்மொழி சிறப்பை எடுத்துரைக்கிறது.
பணத்தை நீ பாதுகாக்க வேண்டும்; அறிவு உன்னை பாதுகாக்கும் என்கிறது. சிடுமூஞ்சிக்கு வியாபாரம் சரிப்படாது என விளக்குகிறது. பொறுமை இல்லாதவரை தொடர்பாளர் ஆக்கக்கூடாது என்ற உண்மையை உரைக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய களஞ்சியம்.
– சீத்தலைச் சாத்தன்