வன்கொலை, பாலியல் கொலை, கூட்டு பாலியல் கொலை போன்ற 15 வழக்கு விபரங்களை எடுத்துரைக்கும் நுால்.
நிர்பயா கொலை வழக்கை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. ஹைதராபாத் சுங்கச்சாவடி அருகே பெண் மருத்துவர் கூட்டு பாலியலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ராஜஸ்தானில் தனியாக பயணித்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவமும் நடந்தது. இது போன்ற வழக்குகளின் புலனாய்வு போக்கு, வழங்கப்பட்ட தண்டனையை கூறுகிறது. அண்மைக்கால பாலியல் கொலைகளை ஆவணப்படுத்தியுள்ளது.
புலனாய்வு அணுகுமுறையில் கிரைம் நாவலை படிப்பதை போன்ற உணர்வு நடையுடன் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்