சாதனை பெண்களின் நேர்காணல் தொகுப்பு நுால்.
பள்ளி படிப்பை தாண்டாத தீபா, மழலையர் பள்ளி, விடுதி நடத்தி தொழிலதிபராக உயர்ந்ததை கூறுகிறது.
பேச்சாற்றல், அபிநந்தினியின் ஆடை வடிவமைப்பு திறன் போன்ற துறைகளில் 21 சாதனை பெண்களின் தனித்தன்மையை உரையாடல் வழியாக விளக்குகிறது. குழந்தைகளை அழகு சிலையாக வடிவமைக்கும் கற்பனை திறன் வியக்க வைக்கிறது.
யோகாவில் சாதனை படைத்த முயற்சியை சொல்கிறது. குழந்தைகளுக்கு புதிய உலகை காட்டும் கதைசொல்லியின் தன்னம்பிக்கையை பேசுகிறது. பெண்களால் சாதிக்க முடியும் என எடுத்துரைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்