உடை தயாரிப்புக்கு வரைபடங்களுடன் வெளியிடப்பட்டுள்ள புத்தகம். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்ற சத்திய வரிகளை நிரூபிக்கிறது.
அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக கற்றுத்தரும் வகையில் நடையழகு இருக்கிறது. எந்த மாதிரி உடைக்கு, எந்த மாதிரி துணி, எந்த அளவு என்பதிலிருந்து எப்படி வெட்டினால் துணி மிச்சப்படும் என்பது வரை விளக்கப்பட்டுள்ளது.
சரியான அளவுமுறைகள் கொடுத்திருப்பதுடன், அதற்கான படங்கள் எண்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர், சிறுமியருக்கான உடைகள் நாகரிகமாக வடிவமைப்பது படங்களாக காட்டப்பட்டுள்ளது. ஆடை வடிவமைப்போர், புதியவற்றை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்