முக்குலத்து ராஜமாதாக்களின் வாழ்க்கையை சுருக்கமாக கூறும் நுால்.
ஆண்ட நாச்சியார்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் பெண்ணரசிகளால் ஆளப்பட்ட பெருமையை கூறுகிறது. சொந்த நாச்சியார், சென்ற நாச்சியார், வந்த நாச்சியார் என பட்டியலிட்டு தரும் விபரங்கள், ஆவலை மேலிட வைக்கின்றன.
நாச்சியார்களின் நடைமுறை, கடவுள் பக்தி, வாரி வழங்கும் குணம், பிள்ளை வளர்ப்பு, குடும்பத்தை தாங்குதல், தியாக தீபமாய் ஒளி வீசிய பாங்கு என கணக்கற்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்மையின் சிறப்பே அது என்பதாக எண்ண வைக்கிறது.
ஒவ்வொரு தகவல்களும் வியக்க வைக்கின்றன. எழுதியுள்ள ஒவ்வொரு பக்கமும் பொக்கிஷம் போல அமைந்துள்ள அருமையான நுால்.
– முகிலன்