அழகு ஒன்றே பிறரை எப்போதும் இழுக்கும் என கூறும் நுால்.
மனதை ஒருநிலைப்படுத்தும் வழிமுறைகளை தெரிவித்துள்ளது. வசியப்படுத்துவதில் கண் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டுகிறது. மூச்சை அடக்கவும், இறைவன் திருவுருவை இடையறாது மனதில் நிறுத்தவும் பழகிக் கொண்டோருக்கு வசிய ஆற்றல் உண்டாகும் என்கிறது.
மனம், அறிவு, நினைவு, உணர்வுகளுக்கிடையே உள்ள நுட்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. பிறர் நலம் பேணுதலும், அன்பும் அருளும் எண்ணங்கள் வலுப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவதாக கூறுகிறது. ஐம்பொறிகளுக்கு எட்டாதவற்றை நினைவில் நிறுத்த பயன்படும் மந்திர மொழி சொற்கள் பற்றி குறிப்பிடுகிறது. வசியம் வழி நல்வழிபடுத்துவதை விவரிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்