தமிழக முதல்வராக பதவி வகித்த கருணாநிதி, ஜெயலலிதா திரைத் துறையிலும், அரசியலிலும் முத்திரை பதித்துள்ள அறிமுகத்துடன் துவங்கும் நுால்.
ஜெயலலிதாவின் ஆளுமையை கருணாநிதி சரியாக கணிக்கவில்லை; திராவிடக் கொள்கையை அறியாதவர் என்ற எண்ணம் இருந்ததாகக் கூறுகிறது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனதையும், ஆட்சி கலைக்கப்பட்டதையும் எடுத்துரைக்கிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மாறி மாறி முதல்வர் பதவி வகித்ததையும், பழிவாங்கும் படலத்திலும் ஈடுபட்டதையும் தெரிவிக்கிறது. இருவரின் நலத் திட்டங்கள், ஆளுமைத் தன்மையையும் அலசும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்