அறக்கருத்துகளை வலியுறுத்தும் நாடக வடிவிலான நுால்.
சமூகம், இலக்கிய வரலாறு, சரித்திரம் என மனதை கவரும் வகையில் எட்டு நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயத்திற்கு அவசியமான மையக் கருத்துகள் உள்ளன. மனதில் உணர்வுகளை தட்டி எழுப்பி, மாண்புள்ள எழுச்சியை மலரச் செய்கிறது. புதியதோர் உலகம் செய்வோம் என்ற நாடகத்தில் சமதர்மத்தை தத்துவமாக எடுத்துக்காட்டி கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது.
புலவன் எத்தனை சிறப்புக்குரியவன் என விளக்கும், ‘நெருப்பில் ஒளிரும் நித்திலம்’ நாடகமும், தியாகத்தைப் பேசும் ‘தென்னகத் தீப்பிழம்பு’ நாடகமும் மனதில் சம்மணமிட்டு அமர்கின்றன. ஒளிரும் வசனங்கள் மின்னல் கீற்றுகளாய் பாய்கின்றன. வித்தியாசமான கருத்துகளை உள்ளடக்கிய நாடக நுால்.
– ஊஞ்சல் பிரபு