கேரள ஜோதிடம் பிரசன்ன மார்க்கத்தில் ஜாதகங்களை ஆய்வு செய்யும் முறையை விளக்கும் நுால்.
எதிர்காலம், கர்ம பலன், மறுஜென்மம் போன்ற புதிர்களுக்கு விடை தருகிறது. பிரசன்ன தந்திரம், மார்க்கம் போன்ற ஜோதிட நுால்கள் இதற்கு வழிகாட்டுகின்றன. மறுவாழ்வு, குடும்ப சண்டை, திருமணத்தடை, மன, உடல் நோய்கள், செய்வினை, கடன் தொல்லை, தொழில் வளர்ச்சி உட்பட 33 கேள்விக்கு விடை தரப்பட்டுள்ளது.
முன்ஜென்ம வினை, பூத, பித்ரு சாபங்களுக்கு பரிகாரங்களை தருகிறது. சோட்டாணிக்கரை பகவதி அருளால் பிரசன்னம், ஆரூடம் பலிக்கும் என்கிறது. கேரள பிரசன்ன ஜோதிட முறைகளையும், அதனால் பயன் பெற்றோரின் ரகசிய அனுபவங்களையும் கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்