கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், ராமாயணத்தை இசை மழையாக பொழிந்தது பற்றிய செய்திகளை உள்ளடக்கிய நுால்.
வால்மீகி ராமாயணம் பக்தர்களிடம் கொண்டிருந்த தாக்கம் பற்றி கூறப்பட்டுள்ளது. தியாகராஜர் இசையில் ராமாயணம் சிறப்பான இடம் பெற்றிருந்ததற்கு சான்றாக, கீர்த்தனைகள் தரப்பட்டுள்ளன.
ராமன் பாதங்களை, தியாகராஜர் இசையால் சரணடைந்தது, ராம அவதாரத்தின் நோக்கம் குறித்த விளக்கங்கள் தெளிவாக உள்ளன. ராமனின் வசீகர தோற்றம், மிகச் சிறந்த வீரம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தியாகராஜரின் பக்தி மார்க்கம் பற்றிய விளக்கமும் தனியாக கூறப்பட்டுள்ளது. தியாகராஜருக்கு ராமன் காட்சியளிப்பதை பரவசமாக காட்டும் இனிமையான நுால்.
– முகில் குமரன்