சினிமா தகவல் துணுக்குகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். படப் பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியமான செய்திகள் தரப்பட்டுள்ளன.
சினிமா உலகின் பல்துறை தகவல்களின் களஞ்சியமாக உள்ளது. இந்தியா முழுதும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பம், வியாபாரம் தொடர்பான விஷயங்கள், திரையிடலில் சுவையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பல நடிகர், நடிகையர் பிரபலமாவதற்கு முன் நடந்தவற்றையும் தருகிறது.
நடிகர்களுடன் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சார்ந்த நிகழ்வுகளும் திரட்டி தரப்பட்டுள்ளன. எளிமையாக தரப்பட்டுள்ளதால் சுலபமாக வாசிக்க முடிகிறது. தலைப்புகள் இன்றி நீண்ட தொகுப்பாக உள்ளதால், அதிக செய்திகள் உள்ளன. சினிமா உலகம் சார்ந்த செய்திகள் அடங்கிய தொகுப்பு நுால்.
– ஒளி