ராஜேந்திர சோழனின் வீர தீர பிரதாபங் களை பேசும் காவிய நுால். உணர்ச்சிகரமாக படைக்கப்பட்டுள்ளது.
மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்திற்கு பின், அரியணையில் அமர்ந்தான் ராஜேந்திர சோழன். அவன் வாய்மொழியாகவும், உள்ளுணர்வு தேடலாகவும், ‘கால சுழற்சியில் அனைத்தையும் மனதில் கொண்டு கரை கடப்பவன் தான், கடைசி எல்லையை காண முடியும்’ என்ற வைர வரி பதிவாகியுள்ளது.
பதவி சுகம் ஒரு போதை மருந்து. போதை அதிகமானால் அழித்து விடும் என்ற நீதியை போதனையாய் தருகிறது. கடல் பயணம் மேற்கொள்ள, என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை விவரிக்கிறது. ராஜேந்திர சோழன், கடாரம் வென்றதை கவனத்தோடு கையாண்டு காவியமாக்கப்பட்டுள்ள நுால்.
– டாக்டர் கார்முகிலோன்