இரும்பு துவங்கி இன்டர்நெட் வரை தொழில் வளர்ச்சியில், டாட்டா குடும்பத்தின் பங்கு குறித்து அலசும் நுால்.
ரேடியோவில் செயற்கைக்கோள் நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்ததை குறிப்பிடுகிறது. தொழிலாளர் பிரச்னையை கையாண்ட விதம், கொள்கை, விதிமுறையை கடைப்பிடிப்பதை சொல்கிறது. நானோ துவங்கி ‘ஜாகுவார்’ வரை கார் உற்பத்தியில் கோலோச்சியதை கூறுகிறது. டி.சி.எஸ்., நிறுவனம் உருவான வரலாற்றை சொல்கிறது.
போரில் காதலியை இழந்த சோகத்தை சொல்கிறது. வாழ்வில் எதிர்ப்பு, தோல்வி, மன குழப்பம், நிராகரிப்புகளை எதிர்கொண்டதை விவரிக்கிறது. அனுபவத்தின் வெளிப்பாடாக அமைந்த தனித்துவ குணாதிசயத்தை பகிர்கிறது. நிறுவனத்தில் ஊழியர்களுடன் கொண்டிருந்த நட்பையும், அக்கறையையும் குறிப்பிடும் நுால்.
– டி.எஸ்.ராயன்