திருமங்கை ஆழ்வார் வரலாறு, பெருமை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
திருமங்கை ஆழ்வார் பாடல்களுடன் தெளிவுரையும் அடங்கியுள்ளது. தேன் மாதிரி திருமால்; எந்த வகை பக்குவமும் செய்யாமல் வணங்கலாம். மூவரில் முதல்வன் என துவங்கும் தாண்டகத்தை படிக்க இனிக்கிறது. எதை, யாருக்கு, எப்போது செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் எட்டு திசைக்கும் முதல்வனான திருமால் என கசிந்துருகுகிறது.
ராமன், வாமனன் அவதாரங்கள் பற்றி பாடுகிறது. அப்ப குடத்தான் என்ற பெருமாள் அருள் செய்யும் ஊர் பற்றிய விபரம் உள்ளது. அறியாமை, ஆசை, ஆணவம், பற்று, பகைமை அணுகாமல் காப்பவன் திருமால் என தமிழ் சுவை சொட்ட படைக்கப்பட்டுள்ளது. திருமால் அன்பர்கள் பாராயணம் செய்ய ஏற்ற நுால்.
– சீத்தலைச்சாத்தன்