வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை கூறும் நுால். முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள செயல்பாடு பற்றி விளக்குகிறது.
திறமைக்கேற்ற பணியை தேர்ந்தெடுத்து கடமை உணர்வோடு பயணிப்பதே வெற்றிக்கான முதல் படி என குறிப்பிடுகிறது. சம்பாதிப்பதால் வரும் மனநிறைவை அடைய வழிகளை கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறது.
திட்டமிடும் போது ஏற்படும் தடைகள் பற்றி அலசுகிறது. தோல்வியை தவிர்க்க பின்பற்றப்பட வேண்டிய உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது. தோல்விகளில் துவண்டால் மனதளவில் உண்டாகும் எதிர்வினைகளை அலசுகிறது.
ஒவ்வொரு செயலிலும் முழு வெற்றி பெற அறிவுரைகள் தருகிறது. நேர்மையான வழியில் வெற்றி இலக்குகளை அடைவதற்கு தக்க வழிகாட்டுதல்கள் உடைய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு