தற்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக படைக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் இறுதி வரை உழைப்பதுடன் நிதானத்துடன் வாழ வேண்டும் என்பதை, ‘அறத்துடன் மண்ணில் வாழ்ந்தே அருளுடன் நிற்றல் வேண்டும்...’ என்ற பாடல் வரிகள் வலியுறுத்துகின்றன. சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பதன் அவசியமும் பாடலாக தரப்பட்டுள்ளது.
பெண்களை மதிப்பதுடன் அவர்களுக்கு துன்பம் தரக்கூடாது என்ற கருத்திலான கவிதை அவசியமானது. அலைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய கவிதை, சமூகத்தில் சூழ்ந்துள்ள அச்சத்தை வெளிப்படுத்துகிறது. திருநங்கையர் அவலமும் தரப்பட்டுள்ளது. லஞ்சம் என்ற கொடிய நோயின் பாதிப்பையும் சுட்டிக்காட்டும் நுால்.
-– முகில்குமரன்