திருக்குறளில் வித்தியாசமான பார்வையை விவரிக்கும் நுால்.
வாழ்வுடன் திருக்குறளும் அதன் கருத்துகளும் பொருந்தி போவதை உரைக்கிறது. அன்றாட சிக்கல்கள், அதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதோடு, தீர்வை வள்ளுவர் பார்வையிலிருந்து அலசுவது பயனுள்ளதாக இருக்கிறது. உரையாடலாக துவங்கி திருக்குறள் கருத்தை இடம் பெறச் செய்து, இறுதியாக குறளை சுட்டிக்காட்டி விளக்குகிறது.
நிழலையும், நிழல் போல் வாழுவோரையும் சுட்டிக்காட்டும். நிழல் மனிதர்கள் கட்டுரை தனித்துவமாக தெரிகிறது.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு பிரவேசித்தது போன்ற உணர்வை தருகிறது. திருக்குறள் குறித்த வாழ்க்கை பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு