கடலில் மூழ்கியதாக கருதப்படும் குமரிக் கண்டம் குறித்த நுால்.
மாணிக்கவாசகர் பாடிய மகேந்திர மலை, மேரு மலை, மந்தார மலை முன்னர் குமரிக் கண்டத்தில் தான் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. கடல் சீற்றம் மற்றும் சுனாமியால் குமரிக் கண்டம் துண்டு துண்டாக சிதறி இருக்க வேண்டும் என கணிக்கிறது. இந்த கருத்தை மையப்படுத்தி, 30 வெண்பாக்களால் படைக்கப்பட்டுள்ளது. உரிய படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
நெருப்பின் பயன்பாடு தெரிந்த பின்னரே, உலோகம் பற்றிய அறிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது. குமரிக் கண்டம் அழிந்த செய்தியை சிலப்பதிகார பாடல்கள் வழியாக விவரிக்கிறது. ஆய்வு அறிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.
– சீத்தலைச்சாத்தன்