இலங்கை தமிழர் கடந்த சோதனைகளை வரலாற்று பூர்வமாக விளக்கும் நுால்.
குமரிக்கண்டம், சுமேரியா பற்றி விளக்கம் தருகிறது. தமிழர் தோற்றமும் பல நாடுகளில் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. இலங்கையில் வாழ்ந்த மக்கள், ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி இலக்கிய ஆதாரத்துடன் தகவல் தருகிறது. புத்த மதம், சிங்களர் வரலாற்றை விவரிக்கிறது. தொண்டு நிறுவனம் பற்றி குறிப்பிடுகிறது.
இரண்டாவது இயலில் ஆங்கில மொழியில் ஆறு கட்டுரைகள் உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்கள், மொழி, பண்பாட்டை போற்றுவதை விவரிக்கிறது. சட்ட நிபுணர் செயல்களை சொல்கிறது. பூம்புகார் அழிந்ததாக குறிப்பிடுகிறது. தமிழர் நிலை பற்றிய நுால்.
– புலவர் ரா.நாராயணன்